பெங்களூரு, : ”பிட் காயின் வழக்கு தொடர்பாக, விசாரணை நடத்த அமெரிக்காவின், விசாரணை அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள், கர்நாடகாவுக்கு வரவில்லை,” என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:நான் உயர் அதிகாரிகளிடம், தகவல் பெற்றே ஊடகங்களிடம் கூறினேன்.
பிட் காயின் வழக்கில் விசாரணை நடத்த, அமெரிக்க விசாரணை அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் யாரும், கர்நாடகாவுக்கு வரவில்லை. இது வெறும் ஊகம்.பிட் காயின் வழக்கில் யார் உள்ளனர் என்பது, அனைவருக்கும் தெரியும். விசாரணையில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது, அனைவருக்கும் தெரியும். காங்கிரசாருக்கும் தெரியும். பேசுவதற்கு காங்கிரசாரிடம், எந்த விஷயங்களும் இல்லை. எனவே மக்களின் மனதை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். எங்கள் அரசை குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் நெருங்குவதால், இது போன்று நடந்து கொள்கின்றனர் என்பது, மக்களுக்கு தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement