பிரித்தானியாவில் வாழ்வதற்கான செலவினங்கள் அதிகரித்து இருப்பதாகவும், இது இன்னும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கரோனா பாதிப்புக்கு பிறகு உயர்ந்துள்ள வரிகளாலும், ஏற்பட்டுள்ள பணவீக்கத்தாலும் பொதுமக்கள் வாழ்வதற்கான வாழ்வின செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், பிரித்தானியாவின் செய்தி நிறுவனத்திடம் பேசிய நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் எனவும், வருங்காலங்களில் அது இன்னும் மோசமடையும் என ஒத்துக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 9 சதவிகித உச்சத்தை தொடும். இதனால் இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஆற்றல் கட்டணங்கள் 693 பவுண்டுகள் உயர்ந்து இருப்பதாகவும், அது அக்டோபர் மாதத்தில் மீண்டும் உயரும் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும் வரும் வாரங்களில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களின் வீட்டை சூடாக்க செலவு செய்வதா அல்லது உணவுக்கு செலவு செய்வதா என்ற தேர்வுக்கு தள்ளப்படுவார்கள், ஆனால் இது அனைத்தும் விரைவில் சரியாகும் என்றும் போரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பணவீக்கத்தில் இருந்து 37,000 பவுண்டுகள் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்களை பாதுகாப்பதற்காக தேசிய காப்புரிமைகளின் வரம்புகளை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து “மக்கள் என்ன செய்யவேண்டும்? மலிவான உணவுகளை வாங்க வேண்டுமா>? தெர்மோஸ்டாட்டைக் குறைக்க வேண்டுமா அல்லது முழுவதுமாக அணைக்க வேண்டுமா?” என்று செய்திநிறுவனம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், மக்கள் கடினமான முடிவு எதாவது ஒன்றை தேர்வு செய்துதான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனை அழிக்க புதிய தளபதி நியமனம்: மே 9ம் திகதிக்குள் வெற்றி: புடின் அதிரடி!