பீஸ்ட் படத்துல விஜய்க்கு ஒரே காஸ்ட்யூம்தானா? தெலுங்கு தயாரிப்பாளரிடம் சீக்ரெட்டை சொன்ன நெல்சன்!

நெல்சன் இயக்கத்தில்
விஜய்
நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஏற்கனவே முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே தற்போது
பீஸ்ட்
படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் ட்ரெயிலர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குநர் நெல்சன் மற்றும் படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டே ஆகியோர் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் பீஸ்ட் படம் குறித்து கலந்துரையாடினர்.

அப்போது பேசிய நெல்சன் படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருப்பதாகவும், படத்தின் ஹீரோவான விஜய்க்கு ஒரே ஒரு காஸ்ட்யூம் மட்டும்தான் என்றும் கூறியுள்ளார். கதை சொன்னபோதே விஜய் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கதையை நம்பியதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய நடிகை பூஜா ஹெக்டே, 20 நாள் ஷூட்டிங்கும் ஒரே மாதிரியாகவே இருந்தது என்றும் எல்லோரும் ஒரே மாதிரியான காஸ்ட்யூமில்தான் இருப்பார்கள். நெல்சன் மட்டும்தான் தினமும் வேறு வேறு காஸ்ட்யூமில் வருவார் என்றும் கேலியாக கூறினார்.

பீஸ்ட் படத்தை தெலுங்கு மொழியில் தயாரிப்பாளர் தில் ராஜூதான் ரிலீஸ் செய்கிறார். இயக்குநர் நெல்சன் மீதுள்ள நம்பிக்கையில்தான் படத்தை வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர்
தில் ராஜூ
.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.