விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி புலவன்குளம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர் நிரம்பியிருந்தது. தற்போது இந்த குளத்தின் தண்ணீர் வற்றிய நிலையில், மீன்பிடித் திருவிழா இன்று நடைபெற்றது. இதில், கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை அடுத்து கண்மாய் கரையில் தயாராக நின்றிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைக்; மீன்களை பிடிக்க குளத்தில் இறங்கினர்.
இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, விரால், ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராம மக்கள் பிடித்துச் சென்றனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து உண்பார்கள். இதேபோன்று பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM