கர்நாடகத்தில் புயல் வேகத்தில் வந்த பி.எம்.டபுள்யூ கார், சாலையை பிரிக்கும் டிவைடரை தாண்டிப் பாய்ந்து ஸ்கூட்டியில் இருந்த பெண் மீது மோதும் பயங்கர காட்சிகள் நிறைந்த வீடியோ வெளியாகி உள்ளது
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள பல்லால்பாக் சந்திப்பில் மதியம் 1 மணியளவில் சிக்னலுக்காக வாகனங்கள் காத்துக் கொண்டிருந்தன. அப்போது எதிர்த் திசையில் புயல்வேகத்தில் வந்த பி.எம். டபுள்யூ கார் இரு சாலைகளையும் பிரிக்கும் டிவைடரை தாண்டிப் பாய்ந்தது. சிக்னல் விழுந்ததும் கிளம்பக் காத்திருந்த ஸ்கூட்டியில் இருந்த பெண் மீது பி.எம். டபுள்யூ கார் மோதி அவரை மற்றொரு வாகனத்தில் தூக்கி வீசியது. இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
#Karnataka
A 2 wheeler rider critically injured after a BMW car jumped over a divider and crashed into another car and two wheeler in #Mangaluru @IndianExpress pic.twitter.com/tuTouAg6FP
— Kiran Parashar (@KiranParashar21) April 9, 2022
சாலையை கடக்க காத்திருந்த மற்றொரு பெண் மீதும் அந்த கார் மோத முயன்றதும் அவர் நூலிழையில் உயிர் தப்பியதும் சிசிடிவி காட்சியில் தெளிவாக தெரிகிறது. சிறிது நேரத்தில் மக்கள் சம்பவ இடத்திற்கு குவிந்தனர். விபத்துக்கு காரணமான பி.எம். டபுள்யூ ஓட்டுநரை பொதுமக்கள் அடித்து உதைக்கத் தொடங்கினர்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி படுகாயமடைந்த பெண் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பிஎம்டபிள்யூ கார் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM