போருக்கு மத்தியில் கீவிற்கு சென்று ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்த போரிஸ்! வெளியான ஆதாரம்



உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜெலன்ஸ்கி-போரிஸ் சந்திப்பை பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இரு தலைவர்களும் நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதனிடையே பிரித்தனியா பிரதமரின் விஜயம் குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்ப மாட்டோம்! பிரித்தானியா, ஜேர்மனி கூட்டாக அறிவிப்பு 


அதில், உக்ரைன் மக்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்க உக்ரைனுக்குச் சென்றுள்ளார்.

உக்ரைனுக்கான பிரித்தானியாவின் நீண்டகால ஆதரவைப் பற்றி அவர்கள் விவாதிப்பார்கள், மேலும் பிரதமர் நிதி மற்றும் ராணுவ உதவிக்கான புதிய தொகுப்பை வழங்குவார் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தலைவர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க உக்ரைன் செல்ல தொடங்கியுள்ளனர்.

ஆஸ்திரிய அதிபர் Karl Nehammer மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் Ursula von der Leyen ஆகியோர் இந்த வார இறுதியில் உக்ரைனுக்கு பயணித்து கீவில் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்தனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.