டெல்லி: மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரம்ஜான் நோன்பு மற்றும் வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியை ஒட்டி எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எலுமிச்சை விலை அதிகரித்துள்ளதாகவும், இந்த விலை மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.100 வரை விற்பனையாகி வந்த ஒரு கிலோ எலுமிச்சை, தற்போது ரூ.400 வரை விற்பனையாகி வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலையேற்றம் காரணமாக குறைத்த அளவிலேயே எலுமிச்சைகள் வாங்கப்படுவதால், விற்பனைக்கு வந்த எலுமிச்சைகளில் கடும் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
