மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் பெட்ரோலியத் தேவைகளை இவை குறைக்கும் என்று கருதப்படுகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் 40 சதவீதப் பேருந்துகள் 80 சதவீத இருசக்கர வாகனங்கள், 30 முதல் 70 சதவீதம் வரையிலான கார்கள் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சாலைகளில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்குள்ளும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோமீட்டர் தூரத்துக்கும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் மின் வாகனங்கள் விற்பனை மற்றும் தயாரிப்பை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.