புதுடில்லி-‘கொரோனா தொற்று பரவல் குறைய துவங்கியுள்ளதை அடுத்து கட்டாய முக கவச உத்தரவை நாடு முழுதும் திரும்ப பெற இதுவே சரியான நேரம்’ என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை வகுப்பு மையத்தின் இயக்குனர் ரமணன் லட்சுமிநாராயணன் கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது.
இந்த நேரத்தில் கட்டாய முக கவச உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும். இதற்காக, பல்வேறு மாநிலங்கள் படிப்படியாக உத்தரவிட்டு வந்தாலும், நாடு முழுதும் இது அமலுக்கு வரவேண்டும்.மற்றொரு உருமாறிய வகை தொற்று பரவல் ஏற்படும் போது, முக கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கி கொள்ளலாம்.
முக கவசம் அணிவதை வலியுறுத்துவதை விட,’பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவதை வலியுறுத்துவதே இப்போதைய தேவையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி-‘கொரோனா தொற்று பரவல் குறைய துவங்கியுள்ளதை அடுத்து கட்டாய முக கவச உத்தரவை நாடு முழுதும் திரும்ப பெற இதுவே சரியான நேரம்’ என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.nsimg3003178nsimg
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.