மேம்படுத்தப்பட்ட பினாகா எம்கே-1 ராக்கெட் அமைப்பு சோதனை.. பொக்ரானில் டிஆர்டிஓ, ராணுவத்தால் வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது

மேம்படுத்தப்பட்ட பினாகா எம்கே-1 ராக்கெட் அமைப்பு மற்றும் தூர இலக்கை தாக்கும் மற்றொரு பினாகா ராக்கெட் அமைப்பு ஆகியவை டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.

ராஜஸ்தானின் பொக்ரான் தளத்தில் நடைபெற்ற சோதனையில் பினாகா ராக்கெட்டுகள் இலக்கை எட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.டி.ஓ. அமைப்பால் பினாகா ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது அவை நவீன தொழில்நுட்பங்களுடன் நீண்ட தூர இலக்கை தாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இரு வார காலமாக பல்வேறு தூர இலக்குகளுடன், மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பு ஏவி சோதிக்கப்பட்டதாகவும், அனைத்து ஏவுதலிலும் இலக்கு துல்லியமாக எட்டப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.