உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் தங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த இழப்பினை இன்னும் அதிகரிக்கும் விதமாக அண்டை நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக அடுத்தடுத்த தடைகளை விதித்து வருகின்றன.
ரஷ்யா ஆயுத பலம் பொருந்திய மிகப்பெரிய நாடாக இருந்தாலும், அதன் முக்கிய வணிகம் என்பது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள், கோதுமை, நிலக்கரி, அலுமினியம், உரங்கள் உள்ளிட்டவையாக இருந்து வருகின்றன.
23 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சாதனை படைத்த மத்திய அரசு.. 2022 நிதியாண்டில் 34% வரி வசூல் அதிகரிப்பு!
உக்ரைனுக்கு ஆதரவு
உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை உள்ளிட்ட பல தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகளுக்கு மத்தியில் தொடர்ந்து ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப் படுத்தும் விதமாக திட்டமிட்டு பல நாடுகளும் தடையை விதித்து வருகின்றன. ஆரம்பத்தில் பொருளாதார தடை, தனி நபர் மீதான தடை, ரஷ்ய நிறுவனங்கள் மீதான தடை, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல எரிபொருட்கள் மீதும் தடை விதித்துள்ளன.
ஜப்பானின் அதிரடி திட்டம்
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு அடுத்தபடியாக இருக்கும் நிலக்கரி வணிகத்திலும் தற்போது சில நாடுகள் கைவைக்க ஆரம்பித்துள்ளன. முன்னதாக ஜப்பான் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு படிப்படியாக குறைக்கப்படும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
படிப்படியாக குறைப்போம்
இது குறித்து ஜப்பான் வர்த்தக துறை அமைச்சர் கொய்ச்சி ஹகியுடா கூறும்போது, ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கு மத்தியில், படிப்படியாக இறக்குமதி செய்வதை குறைக்க உள்ளோம். மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருகின்றோம். நிலக்கரி ஏற்றுமதியில் மட்டும் அல்ல, கச்சா எண்ணெய் இறக்குமதியிலும் ரஷ்யாவில் இருந்து கணிசமாக இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு
ரஷ்யாவின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. இது மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகளாக உள்ளன. இந்த நிலையில் தான் ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவின் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல ரஷ்ய கப்பல்களுக்கும் தடை விதித்துள்ளது. இதுவும் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கலாம்.
நிலக்கரி விலை அதிகரிக்கலாம்
ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்க தொடங்கியுள்ள ரஷ்யா, நிலக்கரி தடையால் இன்னும் பாதிக்கப்படலாம். இதற்கிடையில் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டிய நிலையில், தற்போது தான் சற்றே தணிந்துள்ளது, இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பானின் முடிவால் நிலக்கரி விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
EU bans Russian coal imports, japan also plans to reduce coal import from Russia
EU bans Russian coal imports, japan also plans to reduce coal import from Russia/ரஷ்யாவுக்கு அடுத்த அடி.. மிரண்டு போன புதின்.. நிலக்கரியை கையில் எடுக்கும் அண்டை நாடுகள்..!