உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பினால் உலக அளவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து உலக உணவு பாதுகாப்புத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி செய்தியாளர்களிடம் பேசும் போது, கருங்கடல் பகுதியில் ஏற்படும் மோதல்கள் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும் என்றார்.
கோதுமை, சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே, ஈராக் மற்றும் இலங்கையில் உணவுக்கான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், உள்நாட்டு உணவுப் பொருட்களை அப்படியே வைத்திருக்க பல நாடுகள் முயற்சித்து வருவதால் உணவுக்கான நெருக்கடி அதிகரிக்கும் என்றும் டேவிட் பீஸ்லி குறிப்பிட்டார்.