ரஷ்ய கிராமங்களில் இருந்து உக்ரைனுக்குள் வரும் “walking dead” படை: அதிர்ச்சியூட்டும் வீடியோ!



உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா அதன் கிராமங்களில் இருந்து “walking dead” எனப்படும் புதிய தன்னார்வ படைகளை அனுப்பிவைத்துள்ளது.

உக்ரைன் மீதான போரில் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு மாற்றங்களை ரஷ்யா அடுத்தடுத்து தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

அந்தவகையில், தற்போது சிரிய போரில் தலைமை தாங்கிய அனுபவம் உள்ள தளபதியான ஜெனரல் அலெக்சாண்டர் டிவோர்னிகோவ்-வை ரஷ்ய ஜனாதிபதி புடின் சிறப்பு ராணுவ தாக்குதலுக்கு படை தளபதியாக நியமித்தார்.

இந்தநிலையில் உக்ரைனில் வெற்றியை துரித படுத்துவதற்காக ரஷ்யாவின் பின்தங்கிய கிராமமான டைவாவில் இருந்து “walking dead” எனப்படும் புதிய தன்னார்வ படையை உக்ரைனுக்கு அனுப்பிவைத்துள்ளது.

இந்த தன்னார்வ படைகள் தங்களது முகங்களை முற்றிலுமாக முகமூடிகளை கொண்டு மறைத்து கொண்டு உக்ரைனில் நடைபெறும் போருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த “walking dead” தன்னார்வ படையில் வயதானவர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.   

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வாழ்வின செலவுகள்… இது இன்னும் மோசமடையும்: போரிஸ் எச்சரிக்கை!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.