திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜ் (54). இவர் கடந்த 2008ம் ஆண்டு திருவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். அப்போது, திருகாவல் நிலையத்திற்கு ஒரு வழக்கு சம்பந்தமாக வந்த சீனிவாசன் என்பவரிடம் ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சீனிவாசன், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் அடிப்படையில் கடந்த 29.12.2008 அன்று சீனிவாசன் கோவிந்தராஜ்க்கு ரூ.1000 கொடுத்தபோது கோவிந்தராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதுதொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஹாஜிரா, லஞ்சம் வாங்கிய ஏட்டு கோவிந்தராஜ்க்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : கள்ளச்சாராயம் விற்பனைக்கு உடந்ைதயாக இருந்த இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி., கயல்விழி அதிரடி உத்தரவிட்டார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாகவும், இதற்கு போலீசாரும் துணை போவதாகவும் பொதுமக்கள் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டிஐஜி கயல்விழி, சம்பந்தப்பட்ட சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதாவை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.