கெபெர்ஹா,
வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது .
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்கா ,கெபெர்ஹாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் .அதன்படி தென் ஆபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கேப்டன் டீன் எல்கர்- ஏர்வி களமிறங்கினர். 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஹ்மத் பந்துவீச்சில் ஏர்வி வெளியேறினார். அதன் பிறகு டீன் எல்கர்- பீட்டர்சன் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். எல்கர் 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய பவுமா சிறப்பாக விளையாடினார். பீட்டர்சன் 64 ரன்களிலும் பவுமா 67 ரன்களிலும் வெளியேறினர். முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்துள்ளது.
விர்ரெயன்னே 10 ரன்களிலும் முல்டர் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.