விஜய் இல்லாத அரபிக்குத்து பாடல்… ரசிகர்கள் ஏமாற்றம்

Beast Arabic Kuthu Song Dance Nelson Pooja And Aniruth : மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லெ, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீஸ்ட் படம் வரும் 13-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2-ந் தேதி வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தமிழில் தயரான இந்த படம், தெலுங்கு கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு திரைப்படப்பட உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ஆந்திர ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இயக்குநர் நெல்சன், நாயகி பூஜா ஹெக்டே, மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது விழா மேடையில் நெல்சன் பூஜா அனிருத் மூவரும் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பிரபலமான அரபு குத்து பாடலைப் பாடினர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தளபதி விஜய்யை மிஸ் செய்கிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த பாடல் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்களில் வைரலாக பரவி வருகிறது. மேலம் சமந்தா முதல் வருண் தவான் வரை பிரபலங்கள் பலரும் இந்த பாடலைப் பார்த்து மகிழ்ந்தனர். அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோரால் பாடப்பட்ட இந்த பாடல் வெளியான புதிதில், பல நட்சத்திரங்கள் இந்த பாடலுக்கு நடனமாடியிருந்தனர்.

இந்நிலையில், பீஸ்ட் பட வெளியீட்டிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நேற்று இப்படத்தின்  பீஸ்ட் மோட் என்ற தலைப்பில் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியிடப்பட்டது. இது இந்த படத்தின் தீம் பாடலாகும். பீஸ்ட் படம் வெளியான அடுத்த நாள் பிரபல கன்னட நடிகரான யஷ் நடிப்பில் கேஜிஎஃப்: சேப்டர் 2 மற்றும் ஷாஹித் கபூர் ஜெர்சி ஆகிய படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.