விஸ்வரூபம் எடுக்கும் இந்தி திணிப்பு எதிர்ப்பு: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் 'நச்' பதிலடி..!

நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37-வது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை மந்திரியுமான
அமித்ஷா
தலைமையில் நடந்தது. இதில் துணைத்தலைவர் பிரிதகரி மக்தாப் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா பேசியது மிக்ப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

“நாட்டின் ஒற்றுமையின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பிற மொழிகளை பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள்ளே உரையாடும் மொழி, இந்திய மொழியாகவே இருக்க வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும், என தெரிவித்திருந்தார்.

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழகம் ஏற்காது என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்.

Samantha: நாக சைதன்யாவுக்கு கூட இல்ல.. ஆனா அவர் தம்பிக்கு மட்டும்.. ரசிகர்கள் ஷாக்..!

ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என தமிழக முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின்
இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இசைப்புயல்
ஏ.ஆர். ரஹ்மான்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற கவிதையில் வரும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவாக பகிர்ந்துள்ளார்.

ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோவில், ‘ழ’ கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே ‘தமிழணங்கு’ என்றும், புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே ஏ.ஆர். ரஹ்மான் இதனை பகிர்ந்துள்ளதாக இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.

வசூலில் பாகுபலி படத்தையே மிஞ்சிய RRR – இத்தனை கோடியா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.