உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் 6வது வாரப்போர் தாக்குதலுக்கு மத்தியில், இருநாடுகளும் தங்களது போர் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் இருநாட்டு ராணுவ வீரர்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட இருக்கும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் உக்ரைன் பொதுமக்கள் பிணைக்கைதிகளாக சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சிறைவைக்கப்பட்டு இருந்த பிணைக்கைதிகளில் இன்று(சனிக்கிழமை) 12 ராணுவ வீரர்களை உக்ரைன் ரஷ்யாவிடம் இருந்து பரிமாறிக் கொண்டு இருப்பதாக உக்ரைனின் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் அவரது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து நடைபெறும் மூன்றாவது ராணுவ வீரர்கள் பரிமாற்றம் இதுவாகும்.
மேலும் இந்த பரிமாற்றத்தில் 14 உக்ரைனிய குடிமக்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பி இருப்பதாக உக்ரைன் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது இந்த தகவலில் எத்தனை ரஷ்ய பிணைக்கைதிகள் உக்ரைனியர்களுக்கு மாற்றாக பரிமாறிக்கொள்ளப்பட்டனர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செர்னோபிலில் மேலெழுந்த கதிரியக்க துகள்கள்: ஆபத்தில் ரஷ்ய படை வீரர்கள்!