How to cut onion simple tips in Tamil: நமக்கு சமைத்து முடித்து, பாத்திரங்களை கழுவுவது கூட எளிதாக இருக்கும். ஆனால் வெங்காயத்தை சரியாக நறுக்குவது கஷ்டமான விஷயம். என்ன செய்வது தமிழகத்தின் பெரும்பாலான உணவுகள் வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாது. ஆனால் வெங்காயம் நறுக்க எளிய வழிமுறை இருந்தால் சூப்பர் தானே. உங்களுக்காக கஷ்டப்படாமல் வெங்காயம் நறுக்குவது எப்படி என்பதை இப்போது பார்போம்.
முதலில் வெங்காயத்தை தோலுரித்து பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கும் முழு செயல்முறையும் சொல்வதை விட செய்வது எளிதானது. இதற்கு இலட்சக்கணக்கான இன்டர்நெட் ஹேக்குகள் உள்ளன, அவை அதிக சிரமமின்றி வெங்காயத்தை சரியான வழியில் வெட்டுவது எப்படி என்பதை உங்களுக்குக் கூறுகின்றன.
ஆனால் தொழில்முறை சமையல்காரர்கள் வெங்காயத்தை எவ்வாறு சரியாக எளிமையாக நறுக்குகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் வெங்காயத்தை சரியாக நறுக்க அவர்கள் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட நுட்பம் உள்ளது. சமீபத்தில், சென்பாய் காய் என்று அழைக்கப்படும் ஒரு உணவு பதிவர், தனது யூடியூப் சேனலில், எளிமையாக வெங்காயம் நறுக்குவது என்பது குறித்து விளக்கியுள்ளார்.
இதையும் படியுங்கள்: Kitchen Tips: வெங்காயம் கெட்டுப் போகுமா? அது நல்லதா, கெட்டதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
சென்பாய் காய் பிரபலமான யூடியூபர், இவர் முன்பு சிகாகோவில் உள்ள மிச்செலின் நட்சத்திர உணவகத்தில் பயிற்சி பெற்றவர். இவர் தற்போது ‘How To Cut Michelin-Star Onions’ (வெங்காயத்தை எப்படி நறுக்குவது) என்ற அவரது வீடியோவை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அவர் முதலில், வெங்காயத்தின் தோலை நீக்குகிறார். பின்னர் வெங்காயத்தின் மேல் மற்றும் கீழ் பாகம் இரண்டையும் நீக்குகிறார். அடுத்து, அவர் வெங்காயத்தின் உள் பகுதிகளை அகற்றுகிறார், இதனால் 2-3 அடுக்குகள் மட்டுமே இருக்கும். பின்னர் அவர் இந்த அடுக்குகளின் முனைகளை வெட்டுகிறார், இதனால் வெங்காயமானது வெட்டுதல் பலகையில் தட்டையாக வைக்கப்படும். நீங்கள் இப்போது உங்கள் தேவைக்கேற்ப வெங்காயத்தை நறுக்கலாம்.
நீங்கள் இந்த முறையில் எளிமையாக சரியாக வெங்காயத்தை நறுக்கி, உங்கள் சமையல் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.