புதுடில்லி,-‘தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து, 180 நாட்களுக்குள் மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்’ என, உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களுக்கு சமீபத்தில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், யு.ஜி.சி., கூறியுள்ளதாவது:பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு, பட்டச் சான்றிதழ் உள்ளிட்டவை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பல புகார்கள் வந்துள்ளன. இதனால் உயர் படிப்பு மற்றும் வேலையில் சேருவதற்கு அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்னை தொடர்பாக, ஏற்கனவே, 2016ல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகள் வெளியான 180 நாட்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து கல்வி நிறுவனங்களும் எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி,-‘தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து, 180 நாட்களுக்குள் மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்’ என, உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.