2 வருடத்தில் 1725% வருமானம்.. ரூ.36 டூ ரூ.650.. மல்டிபேக்கர் பங்கு கொடுத்த வாய்ப்பு.. உங்களுக்கு?

கொரோனாவின் முதல் கட்ட அலையின்போது கடந்த 2020ன் தொடக்கத்தில் இந்திய சந்தையானது பலத்த சரிவினை கண்டது. எனினும் மீண்டும் மார்ச் கடைசியில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்த சந்தையானது நல்ல ஏற்றத்தினை கண்டது.

இந்த காலக்கட்டத்தில் பல மல்டிபேக்கர் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு லாபத்தினை வாரி வழங்கின.

கடந்த 2022ம் நிதியாண்டில் மட்டும் 190க்கும் அதிகமான பங்குகள் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளன. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் மட்டும் 90 பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன.

ருச்சி சோயாவின் பங்கு விலை 13% ஏற்றம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

போரோசில் ரீனிவபிள் லிமிடெட்

போரோசில் ரீனிவபிள் லிமிடெட்

அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1700 சதவீதத்திற்கு மேலாக ஏற்றம் கண்ட , போரோசில் ரீனிவபிள் லிமிடெட் பங்கின் விலை பற்றித் தான் இன்று பார்க்கவிருக்கிறோம். இது ரூபாய் 36 என்ற லெவலில் இருந்து 650 ரூபாய் என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது. இந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1725 சதவீதம் அதிகரித்துள்ளது.

போரோசில் ரீனிவபிள் பங்கு வரலாறு

போரோசில் ரீனிவபிள் பங்கு வரலாறு

இந்த மல்டிபேக்கர் பங்கானது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 557.60 – 650 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் 16.50 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஆறு மாதத்தில் இப்பங்கின் விலையானது, 330 ரூபாய் என்ற லெவலில் இருந்து 650 ரூபாய் என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரூ. 1 லட்சம் முதலீடு ரூ.18 லட்சம்
 

ரூ. 1 லட்சம் முதலீடு ரூ.18 லட்சம்

இதே கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கின் விலையானது 245 ரூபாய் முதல் 650 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 165 சதவீத வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்பங்கின் விலையானது 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 18.25 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கலாம்.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் கிட்டதட்ட 8500 கோடி ரூபாயாகும். இதன் புத்தக மதிப்பு ஒரு பங்கிற்கு 47க்கும் சற்று அதிகமானதாக உள்ளது. இது புதுபிக்கதக்க ஆற்றல் துறையை சேர்ந்த ஒரு பங்கு என்பதால், இதன் தேவையானது எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு விலை நிலவரம்?

பங்கு விலை நிலவரம்?

போரோசில் ரீனிவபிள் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வின் முடிவில் NSE-யில் 0.38% அதிகரித்து, 655.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 747.90 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 213.25 ரூபாயாகும்.

இதே BSE-ல் 0.41% குறைந்து, 650.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 748 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 215.80 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

This multibagger stock gives 1725% return in 2 years

This multibagger stock gives 1725% return in 2 years/2 வருடத்தில் 1725% வருமானம்.. ரூ.36 டூ ரூ.650.. மல்டிபேக்கர் பங்கு கொடுத்த வாய்ப்பு.. உங்களுக்கு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.