2021 வருட சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக இழப்பீடு

கட்டுப்படுத்த முடியாத இயற்கை அனர்த்தங்கள் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவருவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி; சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக வீரசிங்க தெரிவித்தார்.

இந்த காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் தவணைக் கொடுப்பனவை அறவிடாமல் ஏக்கருக்கு 40,000 ரூபாவிற்கு உட்பட்டதாக 8,678 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதுடன், இதற்கென 21 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விவசாயிகளுக்கும் இந்த இழப்பீட்டுத் தொகை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் ஏற்கனவே அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கிக் கிளைகள் ஊடாக தற்போது இந்த இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.

கட்டுப்படுத்த முடியாத இயற்கை அனர்த்தங்கள் காரணமாக நெல், சோளம், சோயா, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் மிளகாய் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக இந்த இழப்பீடு வழங்கப்பட்டுவருகின்றன.

முறையாக விண்ணப்பித்து இதுவரை இழப்பீடு கிடைக்கப்பெறாத விவசாயிகள் இது தொடர்பான முறையீட்டை கமநல சேவை மத்திய நிலையத்தின் ஊடாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்ப முடியும் எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.