மும்பை: பெங்களூரு அணிக்கு 152 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.