பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் பிக் சேவிங் டேஸ் சேல் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் இந்த சலுகை விற்பனை தினங்களில் பொருள்களை நல்ல தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.
இந்த நாள்களில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் என பல மின்னணு சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இதனிடையில், ஸ்மார்ட்போன்களை நீங்கள் எதிர்பார்த்திராத விலையில் எப்படி வாங்கலாம் என்று நாங்கள் உங்களிடம் கூற விரும்புகிறோம்.
விவோ நிறுவனத்தின் பிரபலமான
Vivo Y21
ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் இந்த சலுகை விற்பனை தினத்தில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.17,990 ஆக ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
சியோமி தயாரிப்புகளை வாங்க இதைவிட சரியான நேரம் கிடைக்காது!
மலிவு விலையில் விவோ போன்
இதனை வெறும் ரூ.990 செலுத்தி நீங்கள் வாங்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
விவோ ஒய்21
4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வேரியன்டின் விலை ரூ.17,990. இருப்பினும், இந்த போன் பிளிப்கார்ட்டில் ரூ.13,990க்கு கிடைக்கிறது. அதாவது போனின் அசல் விலையில் இருந்து ரூ.4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பயனர்களுக்கு கிடைக்கிறது. இது போனின் விலையில் அற்ப விலைக்குக் குறைக்கிறது. ஏனென்றால், இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.
மலிவு விலை மோட்டோ போன் – ஆனா எந்த போனிலும் இல்லாத ஒரு ஸ்பெஷல் அம்சம் இருக்கு!
ஆனால், உங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்றால் அதன் விலை ரூ.990 ஆக மட்டுமே இருக்கும். பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்ய விரும்பவில்லை என்றால், சுலப மாதத் தவணைத் திட்டத்தின் வாயிலாகவும் போனை வாங்கலாம்.
Vivo Y21 ஸ்மார்ட்போன் கட்டணங்களில்லா மாதத் தவணைத் திட்டத்தில் கிடைக்கிறது. நீங்கள் போனுக்கு எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை. இந்த போனை 6 மாத EMIயில் வாங்கலாம். 6 மாதங்களுக்கு மாதம் ரூ.2,232 வீதம் செலுத்த வேண்டும்.
விவோ ஒய்21 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனானது 6.51″ இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Funtouch OS 11.1 இயங்குதளம் இதில் உள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி35 ஆக்டாகோர் புராசஸர் இதில் நிறுவப்பட்டுள்ளது.
பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பும் உள்ளது. இதில் 13MP மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் கூடிய ஒரு 2MP மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 8MP மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
டைப்-சி, ப்ளூடூத் 5.0, வைஃபை போன்ற இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன. இந்த போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரியுடன் கூடிய 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. Multi Turbo 5.0, Ultra Game Mode போன்ற வசதிகளும் இதில் உள்ளது.
Vivo-Y21 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek MT6580சேமிப்பகம்16 GBகேமரா5 MPபேட்டரி1900 mAhடிஸ்பிளே4.5″ (11.43 cm)ரேம்1 GBமுழு அம்சங்கள்