Karnan: "மண்ணெ்ணெய்யை தண்ணினு நினைச்சு மாரி செல்வராஜ் குடிச்சிட்டார்" – நடிகர் நட்ராஜ்

‘கர்ணன்’ அனுபவம் எப்படியிருந்தது?

கர்ணன் படம் ஷூட்டிங் போனப்போ கொரோனா ஆரம்பிச்சிருச்சு. எங்க புரொடியூசர் தாணு சார் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாதுனு மினி ஹாஸ்பிட்டல் ஏற்பாடு பண்ணியிருந்தார். ஆம்புலன்ஸ் எப்போவும் ஷூட்டிங் ஸ்பாட்ல நின்னுட்டே இருக்கும். டாக்டர்ஸும் ஸ்பாட்-ல எப்பவும் இருப்பாங்க. காசை தண்ணி மாதிரி தாணு சார் செலவு பண்ணுனார். இப்படியிருந்த நேரத்துல லாக்டவுன் போட்டுட்டாங்க. உடனே, அங்கே ஷூட்டிங்காக போட்டிருந்த செட்டைப் பிரிச்சு எடுத்து சென்னைக்கு கொண்டு வந்து போட்டார். சென்னையில கொரோனா தளர்வுகள் வந்ததுக்கு அப்புறம் மிச்ச காட்சிகளை ஷூட் பண்ணுனார். திரும்பவும் செட்டை திருநெல்வேலிக்கு கொண்டு போனார். இப்படி எல்லாம் மாறி மாறி நடந்துக்கிட்டே இருந்தது. அடுத்தாக, மாரி செல்வராஜ் சார் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருப்பார். மண்புழுல இருந்து யானை வரைக்கும் ஷாட் வெச்சார். எல்லாருக்கும் பாதுகாப்பு இல்லாம ஷூட்டிங் போக மாட்டார். தன்னைக்கூட பெருசா பார்த்துக்கமாட்டார். ஒரு சீனை எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருந்தார். அப்போ தண்ணி தாகம் எடுத்துக்கிட்டே இருந்திருக்கு. அப்போ இவருடைய பக்கத்துல தண்ணீர் பாட்டில் இருந்தது. தண்ணிதான்னு இருக்குனு எடுத்து குடிச்சிட்டார். கடைசில, அந்த பாட்டில மண்ணெண்ணெய் இருந்தது. இதுக்கு அப்புறம் வாந்தி எடுத்து சரி பண்ணுனார். இந்தக் கஷ்டத்துலயும் ஷாட் எடுத்தும் முடிச்சார்.

தனுஷ்கூட கேமரா மேன்னா வொர்க் பண்ணிருக்கீங்க. நடிகரா நடிச்சப்போ எப்படியிருந்தது?

தனுஷ்

தனுஷ் சார் பெரிய சப்போர்ட். கொரோனா நேரத்துல நடிக்க முடியாதுனுகூட சொல்லியிருக்கலாம். ஆனா, எந்தவொரு முகசுளிப்பும் இல்லாம ஊர் மக்கள் பக்கத்துல உட்கார்ந்து நடிச்சு கொடுத்தார். ஹீரோ மாதிரி இல்லாம வொர்க் பண்ணுனார். தான் தயாரிக்குற படத்துல ஹீரோ எப்படியிருப்பாரோ அப்படி இருந்தார். தனுஷ்கூட நடிக்க போறப்போ கொஞ்சம் யோசிச்சேன். ‘ஒளிப்பதிவளாரா வேலை பார்த்திருக்கேன். ஆனா, ஒரு ஆக்டரா நடிக்க தயக்கம் இருக்கு. ஒரு வேலை சொதப்பிட்டா தப்பா எடுத்துக்காதீங்கனு’ சொன்னேன். தனுஷ் சார் சிரிச்சிக்கிட்டே, ‘உங்க படங்களெல்லாம் பார்த்திருக்கேன். இதெல்லாம் சொல்லாதீங்க. நீங்க நல்லா பண்ணுவீங்க. போங்கனு’ சொன்னார். ப்ரெண்ட்லியா அப்ரோச் பண்ணுனார். காலேஜ் லைப்ல ப்ரெண்ட்ஸ்கூட வெளியே போன மாதிரியிருந்தது. ‘கர்ணன்’ நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கு.

படம் பார்த்துட்டு நிறைய மக்கள் திட்டுனாங்களே?

படம் பார்த்த நிறைய மக்கள் என்னை நிஜமான கண்ணபிரான்னு நினைச்சிட்டாங்க. சிலர் போன் நம்பர் வாங்கியெல்லாம் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ‘முடிஞ்சா ஊர் பக்கம் வானு’னாங்க. ‘தலைவா, படம் பார்த்தீங்ளானு’ கேட்டேன். ‘பார்த்தேன்னு’ சொன்னாங்க. ‘க்ளைமாக்ஸ்ல தனுஷ் வெட்டிருவார். இதனால, செத்து போயிட்டனா. எல்லா நடிப்பு தலைவானு’ சொல்லி புரிய வெச்சேன்.

கதை கேட்டுட்டு என்ன தோணுச்சு?

கர்ணன் படப்பிடிப்பில்

மாரி கதை சொன்னப்போ ரெண்டு விஷயத்தை சொன்னார். அதாவது, என்னுடைய போஷனை முதல்ல சொன்னார். ‘ஊர்குள்ள நடக்குற பிரச்னைக்காக போறீங்க. அப்போ ஊர் மக்கள் ஒரு மாதிரி நடந்துக்குறாங்க. இது, உங்க உள்ள இருக்கும் மிருகத்தை கொண்டு வருதுனு’ சொன்னார். ‘இதுக்கு முன்னாடி என்ன நடந்திருக்குனு’ கேட்டேன். அதை, ‘ சொல்ல நேரம் வர்றப்போ சொல்றேன்னு சொல்லிட்டார். கரெக்டா என்னோட ஷூட்டிங் போன அடுத்தநாள் இதுதான் நடந்ததுனு சொன்னார். ஏன்னா, முன்னாடியே தெரிஞ்சிருந்தா நம்ம மனசுல வேற ஒன்னை கற்பனை பண்ணி நடிச்சிருவோம். இப்படி இருக்க கூடாதுனு மாரி க்ளியரா இருந்தார். முழு கதையும் சொன்னார். சொல்லிட்டுதான் படத்துல நடிக்க வெச்சார். அவர் சொன்னதைதான் நடிச்சேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.