Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
10 ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு!
தமிழகத்தில், 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் 27 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஒற்றை மொழி ஒற்றுமைக்கு உதவாது.. மு.க.ஸ்டாலின்!
ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்ற அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தொடர்ந்து செய்கிறது. இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது; ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்யும் பாஜக, அதில் வெற்றி பெறாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
IPL 2022: ஐபிஎல் போட்டியில், நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் – 64, தவான் – 35 ரன்கள் எடுத்தனர். 190 ரன்கள் இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 96 ரன்கள் எடுத்தார்.
Tamil News LIVE Updates:
நிதியமைச்சர் பிடிஆர் சாடல்!
இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இந்தியாவில் 70% மாநிலங்களில் இந்தி தாய்மொழி கிடையாது. மும்மொழி கொள்கை என்பது பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக சாடியுள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு நீடிக்குமா?
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
“ “
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4-யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று ஒடிசாவில் இருந்து 20,000 டன் நிலக்கரி வந்துள்ளது. இதனால், மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. படிப்பை முடித்த 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்காத பல்கலை. மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் லஷ்கர் இ-தொய்பா தளபதி நிசார் தர் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் லஷ்கர் இ-தொய்பா தளபதி நிசார் தர் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
18 வயது மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரத்தில், ஆஸ்கர் விருது விழா, அகாடமி நிகழ்வுகளில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து ஆஸ்கர் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலாகிறது.