இந்தியாவின் அந்தமான் – நிக்கோபார் தீவு மற்றும் இந்தோனேசியாவில் சுமத்ரா தீவுக்கும் இடையே மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் – நிக்கோபார் மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே இன்று 5 மணி நேர இடைவெளியில் மூன்று முறை லேசான நில நடுக்கங்கள் ஏற்பட்டன. சுமத்ரா – அந்தமான் தீவு பகுதிகளில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.6 என்கிற ரிக்டர் அளவுகோலில் இந்திய நேரப்படி காலை 7:4 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
முன்னதாக, 7:04 மணிக்கு 4.7 என்கிற ரிக்டர் அளவுகோளிலும், மாலை 4:26 மணிக்கு 4.6 என்கிற ரிக்டர் அளவுகோளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலஅதிர்வு காரணமாக பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. கடந்த 2004-ம் ஆண்டு சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் பயங்கர சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM