புதுச்சேரி
யூனியன் பிரதேசத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர்
சந்திர பிரியங்கா
. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்
என்.ஆர்.காங்கிரஸ்
சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே இவர் நடித்த விழிப்புணர்வு குறும்பட வீடியோ, உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனமாடியது, மகளிர் தினத்தன்று அம்மன் வேடமிட்டு காட்சியளித்தது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தற்போது, மளிகை கடை ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுக்கும் சிறுவனிடம் தான் அமைச்சர் என விளையாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனிடம் அமைச்சர் என்று கூப்பிடு யார் ஓடி வருகிறார்கள் என பார்ப்போம் என்று கூறிவிட்டு மறைந்திருந்து கூப்பிட்ட உடன் ஓடிவந்து உற்சாகப்படுத்திய காட்சிகள் பதிவாகியுள்ளது.
மேலும், சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்த அமைச்சர் திடீரென பல குழந்தைகள் திரண்டதால் “அய்ய்யோ என்னடா லைன் கட்டி நிக்கிறீங்க” என்று கூறிவிட்டு புன்னகைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.