அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – மாநில அரசு செம அறிவிப்பு!

சுலப மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் வாங்கும் திட்டம் டெல்லி அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் காற்று மாசு எப்போதும் அதிகரித்து காணப்படும். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும் காற்று மாசு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து, காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காற்று மாசைக் குறைப்பதற்காக மின்சார வாகன பயன்பாட்டை டெல்லி அரசு ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில், சுலப மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் வாங்கும் திட்டம் டெல்லி அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
டெல்லி அரசு ஊழியர்கள்
தங்கள் துறை மூலமாக மின்சார இருசக்கர வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம். இதற்கான தொகை மாத சம்பளத்தில் இருந்து சுலப மாத தவணையாக (இ.எம்.ஐ.) கழித்துக் கொள்ளப்படும். இத்திட்டத்துக்காக, சி.இ.எஸ்.எல். என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செயல்பட டெல்லி அரசு திட்டமிட்டு உள்ளது. மின்சார வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களையும் சி.இ.எஸ்.எல். அமைக்கும்.

டெல்லியில் புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களில், மூன்றில் இரண்டு பங்கு இருசக்கர வாகனங்களாக உள்ளன. எனவே, இருசக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றினால், காற்று மாசை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்படுகிறது. இதே போல், மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு 5,500 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கும் மற்றொரு திட்டத்தையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.