கான்பெரா:
ஆஸ்திரேலியாவில் மே 21ல் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
தமது சொந்த மாநிலமான நியூ செளத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் கட்சி வேட்பாளர்களை முன்கூட்டியே தேர்வுசெய்ததாகத் மோரிசன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
நீதிமன்றம் அதை நிராகரித்து வழங்கிய தீர்ப்பு அவருக்குச் சாதகமாக அமைந்தது.
தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பங்குபெற வாய்ப்பளிக்கப்படாமல் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்ததால் கட்சி உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மே 21ல் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.