ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை வெடித்த நாளில் இருந்து பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் முக்கியமான பிரச்சனையைத் தனது மனைவி மூலம் எதிர்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவை கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து கடுமையாகப் பாதித்துள்ள நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் அந்நாட்டின் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி தாறுமாறாக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு இணையாக வளரும் ஓசூர்.. பன்னாட்டு நிறுவனங்களின் டார்கெட்-ஆக என்ன காரணம்..?!
அக்ஷதா மூர்த்தி
இந்த முக்கியமான பிரச்சனைகளைச் சரி செய்யப் போராடிக்கொண்டு இருக்கையில் ரிஷி சுனக்-ன் மனைவியும், இன்போசிஸ் நிறுவனர் நாராணயமூர்த்தி-யின் மகளான அக்ஷதா மூர்த்தி-யிடம் இருக்கும் இன்போசிஸ் பங்குகள் குறித்தும், இன்போசிஸ் ரஷ்யாவில் செய்து வரும் வர்த்தகம் குறித்தும், அக்ஷதா மூர்த்தி மூலம் ரிஷி சுனக் லாபம் அடைந்து வருகிறார் என்றும் பல கருத்துக்களை ரிஷி சுனக் மீது வைக்கப்பட்டது.
இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத்
இந்நிலையில் தற்போது அக்ஷதா மூர்த்தி, இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத்-விடவும் அதிகப்படியான சொத்துக்களை வைத்துள்ளதாகச் செய்தி வெளியாகி ரிஷி சுனக்-கிற்குப் புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
460 மில்லியன் டாலர்
இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிதி தரவுகள் அடிப்படையில் நராணயமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி-யிடம் சுமார் 460 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளார். இதன் மூலம் அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத்-விடவும் அதிகப்படியான சொத்துக்களை வைத்துள்ளார் என சண்டே டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
டிவிடென்ட், கேப்பிடல் கெயின்ஸ்
இந்த 460 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளுக்கு அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்திடம் இருந்து டிவிடென்ட் தொகை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து கேப்பிடல் கெயின்ஸ் உட்படப் பல வழிகளில் வருமானம் பெற்று வருகிறார்.
குடியுரிமை
சில நாட்களுக்கு முன்பு அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்து குடியுரிமை நிலையைக் காட்டாத நிலையில், தான் வைத்துள்ள 460 மில்லியன் டாலர் பங்குகளுக்கு இங்கிலாந்தில் எவ்விதமான வரியும் செலுத்தாமல் பல மில்லியன் டாலர் அளவிலான வரியை செலுத்தாமல் சேமித்து வந்தார்.
வரி செலுத்த ஒப்புதல்
இந்தப் பிரச்சனை ரிஷி சுனக்-கிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிய நிலையில், அக்ஷதா மூர்த்தி உடனடியாக உலக நாடுகளில் இருந்து கிடைக்கும் அனைத்து வருமானத்திற்கும் இனி வரி செலுத்துவதாக அறிவித்தார்.
புதிய வரி
இதைத் தொடர்ந்து டிவிட்டரில் தான் பிரிட்டன் வருமானத்திற்குப் பிரிட்டன் வரியும், சர்வதேச வருமான வரிக்குச் சர்வதேச வரியும் செலுத்துவதாகத் தெரிவித்தார். மேலும் புதிய வரி செலுத்தும் முறையைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும், அது 2021-22ஆம் நிதியாண்டுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் வரி வழக்கின் பிரச்சனை விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Infosys Narayana Murthy’s Daughter Akshata Murty Richer than Queen? Tax Case in UK
Infosys Narayana Murthy’s Daughter Akshata Murty Richer than Queen? Tax Case in UK இங்கிலாந்து ராணியை விட அதிகச் சொத்து.. வரி வழக்கில் சிக்கிய அக்ஷதா மூர்த்தி..!