பிரித்தானியாவில் சிறுமிகளை தனிமையான வீட்டில் அடைத்து வைத்து 9 ஆண்டுகளாக சீரழித்த கொடூரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Nottinghamshire-ஐ சேர்ந்த மேத்யூ இலிஸ் என்ற 35 வயதான நபர் ஒரு வீட்டில் சிறுமிகளை அடைத்து வைத்து 9 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறார்.
அந்த சமயத்தில் யாரும் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி வைத்திருக்கிறார்.
மற்றும் இது ஒரு ரகசிய விளையாட்டு என அவர்களை ஏமாற்றியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மேத்யூவால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் இது குறித்து வெளியில் கூறவே கடந்த 2019ஆம் ஆண்டு அவரின் குட்டு வெளியானது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மேத்யூ மீதான வழக்கு டெர்பி கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மேத்யூவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் கூடுதலாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நேற்று முன் தினம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதோடு மேத்யூ விடுவிக்கப்படும் போது அவரின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.