தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக திகழ்ந்து வருகின்றார்
தனுஷ்
. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அக்கதாபாத்திரமாகவே வாழும் ஆற்றல் தனுஷிடம் உள்ளது என்பதால் அனைத்து கதாபாத்திரங்களிலும் கட்சிதமாக பொருந்துகிறார்.
மேலும் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்குகின்றார் தனுஷ். இருப்பினும் தனுஷின் கடந்த சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் அவரின் படங்கள் திரையில் வெளியாகாமல் தொடர்ந்து OTT யில் வெளியாவது ரசிகர்களை ஏமாற்றமடையே செய்துள்ளது.
யாஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..! தரமான சம்பவம் லோடிங்..!
இந்நிலையில் தனுஷ் இனி தன் படங்கள் திரையில் தான் வெளியிடப்படும் என முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது. தற்போது
வாத்தி
,
திருச்சிற்றம்பலம்
,
நானே வருவேன்
ஆகிய படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் தனுஷ். இந்நிலையில் நேற்றுடன் தனுஷின்
கர்ணன்
படம் வெளியாகி ஒரு வருடம் ஆகின்றது.
இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற கர்ணன் படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதை நேற்று தனுஷ் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது வெளியான தனுஷின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்தனர்.
ஏனென்றால் தனுஷ் அப்புகைப்படங்களில் சற்று எடை கூடி காட்சியளிக்கின்றார். மேலும் அவர் நடிக்கும் நானே வருவேன் படத்திற்காக தனுஷ் தன் உடல் எடையை அதிகரித்து வருவதாகவும் சில தகவல்கள் வருகின்றன.
எனவே இதனை கண்ட ரசிகர்கள் வெயிட் போடவேண்டாம் தனுஷ் அதெல்லாம் நமக்கு செட் ஆகாது என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் எப்போதும் போல இருங்க தனுஷ் அதுதான் நல்லா இருக்கும் எனவும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.