வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-விவசாயத்தில் புதிய அணுகுமுறைகள் மற்றும் நுட்பங்களை கற்பதற்காக, தமிழகம் உட்பட இந்தியாவின் ஏழு மாநிலங்களை சேர்ந்த வேளாண் துறை அதிகாரிகள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.
இந்தோ – இஸ்ரேல் வேளாண் திட்டத்தின் கீழ், இந்தியாவைச் சேர்ந்த வேளாண் துறை அதிகாரிகளுக்கு, மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் மாஷாவ் வேளாண் பயிற்சி மையத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்க இந்தியாவின் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் துறை அதிகாரிகள் 18 பேர் இஸ்ரேல் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு 15 நாள் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.வேளாண் துறையில் இஸ்ரேல் சந்திக்கும் சவால்கள், அவற்றை எதிர்கொள்ள அவர்கள் கையாளும் அணுகுமுறைகள், புதிய நுட்பங்கள் இந்திய அதிகாரிகளுக்கு கற்பிக்கப்படுகிறது.
தமிழகம், ஹரியானா, குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, அசாம் மற்றும் மிசோரமை சேர்ந்த 18 அதிகாரிகள் கடந்த மாதம் 29ம் தேதி இஸ்ரேல் சென்றனர். இவர்களுக்கான பயிற்சிகள் நாளையுடன் முடிவடைகிறது.
Advertisement