இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி: எந்த மருந்தை செலுத்த வேண்டும்?

கொரோனா
பெருந்தொற்றுக்கு
தடுப்பூசி
மட்டுமே தீர்வு என்ற நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன் தொடர்ச்சியாக, ஒமைக்ரான் பரவல் மூன்றாம் அலைக்கு வித்திட வாய்ப்புள்ளது என்பதால், சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும்,
பூஸ்டர் டோஸ்
போடவும் அனுமதி அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து. இதனையேற்று, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கவுள்ளன.

முதல் 2 தவணைகளில் போடப்பட்ட
கொரோனா தடுப்பூசி
மருந்தையே பூஸ்டர் தடுப்பூசிக்கும் பயன்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான நடைமுறைகள் குறித்து, மாநிலங்களின் சுகாதாரத் துறை செயலாளர்களுடன், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “ஒருவருக்கு முதல் 2 தவணைகளில் போடப்பட்ட அதே தடுப்பூசி மருந்தையே பூஸ்டர் டோஸுக்கு பயன்படுத்த வேண்டும். இதற்காக தனியார் மருத்துவமனை மையங்கள் கொரோனா தடுப்பூசி மருந்தின் விலையோடு கூடுதலாக ரூ.150 வரை சேவைக் கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகியிருந்தால், அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடைவர்கள். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள், கோவின் இணையளத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ளதால், அவர்கள் பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய விவரம், கோவின் இணையளத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.” என்றார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், ஏற்கனவே வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தற்போது அரசு தடுப்பூசி மையங்களில் போடப்பட்டு வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளின் விலை ரூ.225ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த தயாரிப்பு நிறுவனங்கள் நேற்று வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.