கொழும்பு,
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இரண்டு வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
“தேசிய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கிறிஸை நியமிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர். இலங்கை அணியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் அவரிடம் உள்ளது. ,” என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ ஆஷ்லி டி சில்வா தெரிவித்தார்.
இதுகுறித்து சில்வர்வுட் கூறுகையில், “இலங்கையுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இலங்கை கிரிக்கெட் அணியில் திறமையான மற்றும் ஆர்வமுள்ள வீரர்கள் உள்ளனர். வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை சந்திப்பதில் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்று அவர் கூறினார்
சில்வர்வுட், அக்டோபர் 2019 இல் இங்கிலாந்து ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். 2019 இல் இங்கிலாந்து ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது அப்போதைய தலைமை பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸின் கீழ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.