உக்ரைனுக்கு சென்ற பிரிட்டன் பிரதமர்…அதிபர் செலன்ஸ்கியுடன் ஆலோசனை

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 45-வது நாளாக தொடர்கிறது.  இதனைத் தொடர்ந்து, ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்த சூழலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார். கீவ் நகரில் அதிபர் செலன்ஸ்கியை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட அவர், கீவ் நகர வீதிகளை நடந்தே பார்வையிட்டதோடு மக்களுடனும் கலந்துரையாடினார்.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்; ஜெலென்ஸ்கி கூறுவது என்ன

பாதுகாப்பு காரணங்களுக்காக போரிஸ் ஜான்சனின் பயண விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. புட்சா மற்றும் இர்பின் நகரங்களில் புடின் செய்திருப்பது போர்க்குற்றங்கள் எனக் குறிப்பிட்ட போரிஸ் ஜான்சன், இதனால் புடினுக்கும், அவரது அரசுக்கும் நிரந்தர அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். சில நாட்களிலேயே உக்ரைனைக் கைப்பற்றி விடலாம் எனவும், கீவ் நகரம் சில மணி நேரங்களிலேயே வீழ்ந்துவிடும் எனவும் ரஷ்ய ராணுவம் நம்பியதாகவும், ஆனால் சிங்கத்தைப் போன்ற துணிச்சலை வெளிப்படுத்தி, அவர்களது எண்ணம் தவறு என்பதை உக்ரைன் மக்கள் ரஷ்ய ராணுவத்திற்கு உணர்த்தியுள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார். உலகம் புதிய ஹீரோக்களைக் கண்டறிந்துள்ளதாகவும், உக்ரைன் மக்களே அந்த ஹீரோக்கள் எனக் குறிப்பிட்ட போரிஸ் ஜான்சன், உக்ரேனிய மக்களின் வெல்ல முடியாத வீரம் மற்றும் தைரியம் ஆகியவற்றால் தான் புடினின் கொடூரமான நோக்கங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | உக்ரைன் ரயில் நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்: 30-க்கும் மேற்பட்டோர் பலி, பலருக்கு காயம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.