உக்ரைனுக்கு எதிரான போரை முன்னெடுக்க புதிய தளபதியை நியமித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் அலெக்சாண்டர் டிவோர்னிகோ, 2015-ல் சிரியா அரசுக்கு உதவும் வகையில் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் சிரியாவின் அலெப்போ(aleppo) நகரம் கைப்பற்றப்பட்டு சிரியா அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், நாஜி படையை எதிர்த்து ரஷ்ய படைகள் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 9-ஆம் தேதி அனுசரிக்கப்படும் வெற்றி தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் உக்ரைன் ராணுவ நடவடிக்கையில் தெளிவான முன்னேற்றத்தை காட்ட ரஷ்ய ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.