திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர லாரியை அனுமதிக்கக் கோரி பண்ணாரி சோதனைச் சாவடி அருகே லாரி ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பம், திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர லாரி மற்றும் 16.2 டன்னுக்கு குறைவாக பாரம் ஏற்றிய லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கு மட்டுமன்றி தாளவாடி சோதனைச்சாவடி மற்றும் காரப்பள்ளம் சோதனைச் சாவடியிலும் வனத்துறையினர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி வாகனங்களை சோதனையிட்டு அனுமதிக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவுபடியே பண்ணாரி சோதனைச் சாவடியில் 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றிய லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால் `அனைத்து லாரிகளையும் அனுமதிக்க வேண்டும்’ என லாரி ஓட்டுநர்கள் இன்று மாலை சோதனைச்சாவடி முன் மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற காவல் ஆய்வாளர் நெப்போலியன் லாரி ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். `சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடியே வாகனங்கள் அனுமதிக்கபடுகின்றன’ என்ற நீதிமன்ற உத்தரவை அவர் காண்பித்த பிறகு, அவர்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டனர். ஓட்டுநர்கள் சாலை மறியல் காரணமாக தமிழகம் கர்நாடக இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப்டடது.
சமீபத்திய செய்தி: `கொரோனா இன்னும் முடியவில்லை… பாதுகாப்பாக இருங்கள்’- மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM