கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது பசவேசுவரா மடம். இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பஞ்சமுக
ஆஞ்சநேயர் சிலை
அமைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படும் இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலிகாட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
ராம நவமி நாளில் திறக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். சிலை திறப்பு நிகழ்ச்சியில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் தலைமையில், 50 தொழிலாளர்களின் 7 ஆண்டுகள் தொடர் கடின உழைப்பில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மோடி எச்சரிக்கை… இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு?
இயற்கையான சூழலில், இரும்பு மேடை, வலுவான சிமென்ட் கான்கிரீட் பாதுகாப்புடன் இச்சிலை நிறுவப்பட்டுள்ளதன் மூலம் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பசவேசுவரா மடத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.