கிழக்கு உக்ரைனின் முற்றுகைக்கு உட்பட்ட பகுதிகளை நோக்கி ரஷ்ய கவச வாகனங்கள் மற்றும் பீரங்கிகளின் பெரும் அணிவகுப்பு ஒன்று முன்னேறுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கீவ் நகரத்தின் சுற்றுவட்டாரங்களில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின் வாங்கியுள்ள நிலையில், கிழக்கு உக்ரைனில் பெரும் படைகளை திரட்டி வந்தது ரஷ்யா.
இந்த நிலையில், அடுத்தகட்ட போர் கிழக்கு உக்ரைனில் முன்னெடுக்கப்படும் என பரவலாக பேசப்பட்டது.
ஆனால், அதையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது 8 மைல் தொலைவு கொண்ட இராணுவ வாகன அணிவகுப்பு ஒன்று கிழக்கு உக்ரைன் நோக்கி முன்னேறுவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
8 மைல் தொலைவு கொண்ட அந்த அணிவகுப்பு Velykyi Burluk நகரம் நோக்கி முன்னேறுவதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைனில் இதுவரை அதிக உயிரிழப்பை எதிர்கொண்ட ரஷ்ய துருப்புகள், தற்போது 2012ல் விலகிக்கொண்ட இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, மால்டோவா இராணுவத்தினரும் ரஷ்ய துருப்புகளுடன் கிழக்கு உக்ரைனில் களமிறங்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான Mykhaylo Podolyak தெரிவிக்கையில், ரஷ்யாவின் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள உக்ரைன் தயார் எனவும், உக்ரைன் கண்டிப்பாக அதில் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரகசியமாக கீவ் நகருக்கு விஜயம் செய்துள்ளதுடன், ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகள் முன்னெடுக்க இருப்பதை உறுதி செய்துள்ளார்.