ராஜஸ்தான் மாநிலத்தில் 30 வயது நிரம்பிய வாலிபர் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் பாலி பகுதியில் சாகன் பஞ்சாரா (30) மற்றும் மம்தா பஞ்சாரா (23) இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கேட்டரிங் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தனர். சாகனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருந்தனர். மம்தா மீது கொண்ட காதலால் தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மம்தா குடும்பத்தாரிடம் பெண் கேட்டுச் சென்றுள்ளார் சாகன். சாகனின் இந்த செயலை விரும்பாத மம்தா மற்றும் அவரது தாயார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
மம்தாவுக்கும் ஏற்கனவே 2 திருமணங்கள் நடைபெற்று அவை இரண்டும் தோல்வியில் முடிந்தன. தற்போது அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மம்தாவுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக சாகன் சந்தேகப்பட்டு அவருடன் பல சந்தர்ப்பங்களில் வாக்குவாதம் செய்துள்ளார். தன்னை திருமணம் செய்து தன்னோடு வாழுமாறு வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் மம்தா சாகனை ஒரு பொருட்டாக மதிக்காமல் தனது வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாகன் இரவு வேளையில் மம்தா வீட்டுக்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். அதே வீட்டில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலையும் செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் சாகன் பாக்கெட்டில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றை மீட்டுள்ளனர். தன் மனைவியை விட்டுவிட்டு வந்த போதிலும் மம்தா திருமணத்திற்கு சம்மதிக்காததால் கொலை செய்ததாக அவர் எழுதியுள்ளார். சாகனை மம்தா வீட்டில் இறக்கிவிட்ட இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அவர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: சீனாவை விட இந்தியாவே அதிக உதவிகளை செய்கிறது: இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM