ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு

புனே:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்  பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாப் டு பிளிஸ்சிஸ்  முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் 3 ஆட்டங்களில் அதாவது டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக தோற்று புள்ளி பட்டியலில் பின்தங்கி நிற்கிறது. 
மேலும் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 2 வெற்றி (கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக), ஒரு தோல்வி (பஞ்சாப்புக்கு எதிராக) என்று 4 புள்ளிகளுடன் நல்ல நிலையில் உள்ளது. 
இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 17-ல் மும்பையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது.
மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்வி அடைந்து வரும் நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டம் கிரிகெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.