புனே,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன.
புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாப் டு பிளிஸ்சிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இருவரும் தலா 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
பெங்களூரு அணியின் அசத்தலான பந்துவீச்சில் மும்பை அணியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், சூரியகுமார் யாதவ் தனி ஆளாக அணியை சரிவில் இருந்து மீட்டார். அவர் 37 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார்.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.