மும்பை:
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் 50 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லக்னோ அணி சார்பில் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி கட்டத்தில் போராடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 6வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் சாஹல்.
இந்தப் பட்டியலில் பிராவோ (173), மலிங்கா (170), அமித் மிஸ்ரா (166), பியூஷ் சாவ்லா (157), ஹர்பஜன் சிங் (150) என முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்…ஐபிஎல்: 44 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி