ஐபோன் வாங்க சரியான நேரம் இது!

நீங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அதுவும் ஆப்பிள் ஐபோனை வாங்க விரும்பினால், உங்களுக்கான ஒரு சிறந்த ஆஃபர் இருப்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆப்பிள்
ஐபோன் 12
, ஐபோன் 13 ஸ்மார்ட்போன்கள் iStore இல் பெரும் தள்ளுபடியில் கிடைக்கின்றன.

இந்த தள்ளுபடி விற்பனையில் கூடுதலாக வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்களும், நல்ல எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்படுகிறது. இங்கு பயனர்கள் வாங்கும் iPhone 12 போனில் ரூ.28,000 வரை சேமிக்க முடியும்.

அடிக்குற வெயிலுக்கு ஏசி வேணும் தான் – அதுக்காக இதெல்லாம் தெஞ்சுக்காம இருக்கக் கூடாது!

ஐபோன் வாங்க சரியான நேரம்

ஆப்பிள் ஐபோன் 12 தற்போது iStore இல் ரூ.65,990 விலையில் உள்ளது. இதற்கு 5,000 நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. HDFC வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் 12 ஸ்மார்ட்போனிற்கு ரூ.5,000 கூடுதல் கேஷ்பேக் கிடைக்கிறது.

சியோமி தயாரிப்புகளை வாங்க இதைவிட சரியான நேரம் கிடைக்காது!

குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு மட்டுமே கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கின்றன. அனைத்து தள்ளுபடிகளுக்கும் பிறகு, விலை ரூ.56,900 ஆக குறையும். மேலும், நல்ல நிலையில் இருக்கும் பழைய iPhone XR 64 GB வேரியன்ட் ஸ்மார்ட்போனுக்கு ரூ.18,000 வரை எக்ஸ்சேஞ்ச் வேல்யூ அளிக்கப்படுகிறது. இந்த சலுகையையும் பயன்படுத்தினால், ஐபோன் 12 இன் விலை ரூ.38,900ஆக குறையும்.

HDFC அல்லது ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டைகள் மூலம் இந்த போனை வட்டியில்லா சுலப மாதத் தவணை திட்டத்தில் வாங்கலாம். இதே சலுகைகளைப் பயன்படுத்தி ஐபோன் 12 மினி ஸ்மார்ட்போனின் 128GB வேரியன்டை ரூ.42,900க்கு வாங்க முடியும்.

ஐபோன் 13 சலுகைகள்

மேலும் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் கேஷ்பேக் உதவியுடன் 128GB வேரியன்ட் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை ரூ.51,900 செலுத்தி வாங்கலாம். மாதம் ரூ.2,341 செலுத்தி சுலபத் தவணைத் திட்டத்தில் இந்த போனை வாங்கிச் செல்லலாம். இதே ஐபோன் 13 மினி 128GB மாடல், ரூ.46,900 விலையில் கிடைக்கிறது.

முறையே ரூ.1,19,900 மதிப்புள்ள ஐபோன் 13 ப்ரோ 128GB ரூ.97,900 ஆகவும், ரூ.1,29,900 மதிப்புள்ள ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 128GB ரூ.1,07,900 ஆகவும் சலுகை விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. லேட்டஸ்டாக இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட iPhone SE 3 விலை ரூ.28,900 ஆக உள்ளது. இதன் அசல் விலை ரூ.43,900 என்பது குறிப்பிடத்தக்கது.

நாசிக்கில் தயாராகும் இ-பாஸ்போர்ட் – விரைவில் விநியோகம் தொடங்கும்!

இந்தியாவில் உள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான Amazon, Flipkart, Vijay Sales, Reliance Digital உள்ளிட்ட பிற இணையதளங்களிலும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தளங்களிலும் விலையை சரிபார்த்த பின், சலுகைகள் அதிகம் உள்ள தளத்தில் போனை ஆர்டர் போடலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.