திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகளில் வன விலங்குகள் பயன்பாட்டுக்காக கூடுதலாக 25 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளன. அதில், ஏலகிரி மலை, ஜவ்வாது மலை, மாதகடப்பா, நெக்னாமலை, காவனூர், பனங்காட்டேரி உள் ளிட்ட பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த அடர்ந்த வனப்பகுதிகளில் வன உயிரி னங்களான கரடி, மான், முயல், மலைப் பாம்பு, காட்டுபன்றி, காட் டெருமை உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன.
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஏலகிரி மலை, ஜவ்வாதுமலை போன்ற சுற்றுலா மலைப்பிரதேசங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும், வனப் பகுதிகளுக்குள் செல்பவர்கள் அங்கு கண்ணாடி பொருட்கள், கழிவு களை போன்றவற்றை வீசி செல்லக் கூடாது என வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வன விலங்குகளுக்கு இடையூறு செய்வது தெரிய வந்தாலோ, தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவு, வனப்பகுதிக்கு தீ வைப்பு, சட்ட விரோத செயல் களில் ஈடுபடுவது போன்ற குற்றச்செயல்களில் யாராவது ஈடுபடு வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, வனப்பகுதிக்குள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்யப்படும்.
மேலும், கோடை காலம் முன்னிட்டு, வன உயிரினங்கள் தண்ணீரின்றி உயிரிழப்பதை தடுக்கும் வகையிலும், தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்கு வன விலங்குகள் வருவதை தவிர்க்கும் வகையிலும், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள காப்புக்காடு களில் 10 இடங்களில் மிகப்பெரிய அளவிலான தண்ணீர் தொட்டிகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் வன மாவட்டத்தில் கூடுதலாக 25 தண்ணீர் தொட்டி கள் அமைக்க விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும், சிங்காரப்பேட்டை வனச் சரகத்துக்குட்பட்ட கோவிந்தாபுரம் காப்புக்காட்டில் அமைக்கப் பட்டுள்ள தண்ணீர் தொட்டியின் நிலை குறித்து அங்கு ஆய்வு செய்யப் பட்டுள்ளது’’ என்றார்.