தவக் காலத்தின் முக்கிய பகுதியான பரிசுத்த வாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது. குருத்தோலை ஞாயிறுடன் ஆரம்பமாகும் பரிசுத்த வாரம் தவக்காலத்தின் மிக முக்கியமான ஏழு தினங்களைக் கொண்டுள்ளது.
குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன், பெரிய வெள்ளி, அல்லேலலூயா சனி, மற்றும் ஈஸ்டர் ஞாயிறு ஆகியதினங்கள் இந்த பரிசுத்த வாரத்தில் உள்ளடங்குகின்றன.
குருத்தோலை ஞாயிறு முதல் ஈஸ்டர் பெருவிழா வரையான ஏழுநாட்களையும் புனிதவாரம் என்றழைக்கினறோம் வருடத்தின் 52வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்றழைக்கவேண்டும்.இயேசு இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்களே இந்த புனிதவாரம்.
இயேசுபிரான் தாம் துன்புற்று இறப்பதற்கு முன்னதாக nஐருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்வை குருத்தோலை ஞாயிறு தினம் நினைவுபடுத்துகின்றது.
சிலுவை மரணத்திலிருந்து இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினத்துக்கு முன்னதாக வரும் ஞாயிறுதினம் குருத்தோலை ஞாயிறாக வருடந்தோறும் அணுஷ்டிக்கப்படுகிறது. இன்றுடன் ஆரம்பமாகும் புனித வாரத்தில்;, புனித வியாழன், புனித வெள்ளி ஆகிய தினங்கள் மிக முக்கியமானவையாகும். இந்த நாட்களில், கிறிஸ்தவ அடியார்கள் நோன்பிருந்து இயேசுவின் மரணத்தை தியானிப்பார்கள்.