கோடை வெப்பத்தை சமாளிக்க கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு, கூறை அமைத்து தண்ணீர் பீச்சி அடித்து வருகின்றனர் சிறுவர் பூங்காவின் பணியாளர்கள்.
சென்னை கிண்டியில், நாட்டிலேயே 8வது சிறிய தேசிய பூங்கா அமைந்துள்ளது. பரந்த நிலப்பரப்பில் சுமார் 350க்கும் மேற்பட்ட தாவர வகைகள், ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்கள், பெரியவர்கள் அமர்ந்திருக்கும் வகையில் இருக்கைகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், குழந்தைகள் மணல் பரப்பில் விளையாடுவதற்கு ஏற்றுது போன்ற அமைப்புகள் என ஏராளமான வசதிகளுடன் இந்த பூங்காவின் வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவையன்றி பூங்காவில் மான்கள், குரங்குகள், நரி உள்ளிட்ட 10 பாலூட்டி சிற்றினங்கள் உள்ளன. மேலும் மயில், வெள்ளை மயில், பச்சை கிளி, காதல் களி பறவைகள், ஈமு கோழி, நெருப்பு கோழி என 300 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருக்கின்றன. இவற்றுடன் நல்ல பாம்பு, மலை பாம்பு, சார பாம்பு, கண்ணாடி விரியன், மண் பாம்பு, முதலை, ஆமை, உள்ளிட்ட 13 வகை சிறுவர் பூங்காவில் இடம் பெற்றுள்ளன. இதனை காண்பதற்கு தினசரி 1500 லிருந்து 2,000 நபர்கள் செல்வதுண்டு. விடுமுறை நாட்கள் எனில், 4,000 -லிருந்து 5,000 பேர் செல்வதுண்டு. குடும்பமாக சென்று மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட, உதவும் இப்பூங்காவில் சிறுவர்களுக்கு 5 ரூபாயும் பெரியவர்களுக்கு 20 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
தற்போது கோடை விடுமுறை என்பதால், இப்போது கூடுதலாகவே வரவேற்பு இருப்பதாக சிறுவர் பூங்கா பாரமரிப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து அந்த அதிகாரிகள் நம்மிடையே பேசியபோது, `இப்போது விடுமுறை காலம் என்பதால் கூடுதலாகவே மக்கள் பூங்காவுக்கு வருகின்றனர். அதேநேரம் கோடைகாலம் என்பதால், விலங்குகளுக்கு உடல்நல சிக்கல்கள் வரக்கூடுமோ என்ற விஷயத்திலும் கவனமுடன் இருக்கிறோம். விலங்குகளுக்கு கோடை காலத்திற்கு ஏற்ப உணவுகளை வழங்கி வருகிறோம். போலவே விலங்குகள் வெப்பத்தை தணிக்கும் வகையில் கூடாரம் அமைத்து தண்ணீர் பீச்சி அடித்து வருகிறோம். கோடை காலம் முடியும் வரை இந்த பணிகள் தொடர்ந்து நடைபெரும்” என்றனர்.
சமீபத்திய செய்தி: “தமிழ்நாடு தாண்டினாலே மும்மொழிக்கொள்கைதான்!” – பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM