கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சுணக்கம் காட்ட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தொற்று மற்றும் இறப்பு விகிதம் குறைவால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கமும், சுணக்கமும் ஏற்பட்டுள்ளது, மக்கள் தடுப்பூசியை தாமதமின்றி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்தியாவின் முதல் டெலடாக் டெலிமெடிசின் தொலை மருத்துவத்துறையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார், இவ்விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி, மருத்துவமனை தலைவர் குருசங்கர், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
image
இதைத் தொடர்ந்து விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது… தமிழகத்தில் 10 கோடியே 54 இலட்சத்து 77 ஆயிரத்து 144 பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது, தமிழகத்தில் 92.03 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, தமிழகத்தில் 77.19 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை,
image
கொரோனா தொற்று குறைவு மற்றும் இறப்பு விகிதம் குறைவால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கமும், சுணக்கமும் ஏற்பட்டுள்ளது, மக்கள் தடுப்பூசியை தாமதன்றி செலுத்திக் கொள்ள வேண்டும், தடுப்பூசி செலுத்தாதவர்களை தேடி தேடி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தில் விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்கு ஒரு லட்சம் ரூபாயை அரசு இலவசமாக வழங்குகிறது, இத்திட்டத்தில் 3 மாதத்தில் 44 ஆயிரம் பேருக்கு 39 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.